மேலும் செய்திகள்
கிரஷர் தொழிலாளி மர்ம சாவு
11-Oct-2024
குடிபோதையில் தகராறு 4 வாலிபர்கள் கைது
04-Nov-2024
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நண்பர்களிடையே ஏற்பட்ட பண தகராறில் டீக்கடை மாஸ்டர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர்.திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தை சேர்ந்தவர் அருண்பாண்டியராஜன் 26. திண்டுக்கல் கிழக்கு ரதவீதி டீக்கடை ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்த இவருக்கு அம்மு என்ற மனைவியும் 7, 10 வயதுகளில் 2 மகள்களும் உள்ளனர். நேற்று காலையில் நண்பர்களை பார்த்து வருவதாக வீட்டில் கூறி சென்ற அருண்பாண்டியராஜன் மாலை வரை வீடு திரும்பவில்லை. திண்டுக்கல் -பழநி ரயில் வழித்தடத்தில் ரவுண்ட் ரோடு புதுார் சக்திகாளியம்மன் கோயில் அருகே புதரில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.நகர் வடக்கு போலீசார் அருண்பாண்டியன் உடலை கைப்பற்றி , அதன் அருகே ரத்தக்கறையுடன் கிடந்த கல்லையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் நேற்று மாலையில் நண்பர்களுடன் ரவுண்ட்ரோடு பகுதியில் பேசிக்கொண்டிருந்தபோது பணம் கொடுக்கல் -வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நண்பர்கள் அருண்பாண்டியராஜனின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது.இதை தொடந்து அருண்பாண்டியன் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் 26, கோபி 35, ஜெயக்குமார் 24, ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11-Oct-2024
04-Nov-2024