மேலும் செய்திகள்
விளையாட்டு விழா
29-Jan-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முகமது யாஸர், நவ்ரீனா மரியம் ஆகியோரின் மகள் எம்.மிஸ்லா லியானா. வயது 2 சிறுமி 30 தாவரங்களின் அறிவியல் பெயர்களை ஒரு நிமிடம் 14 வினாடிகளில் கூறி இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். மேலும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் 2025ல் இவருடைய சாதனை இடம்பிடித்தது. சிறுமியின் தந்தை சாப்ட்வேர் இன்ஜினியர், தாய் இல்லத்தரசி. சிறுமியின் பாட்டியான ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை ரபீலா, ஓய்வு பெற்ற அரசு ஊழியரான தாத்தா ஜலாலுதீன் ஆகியோர் இந்த உலக சாதனையை நிகழ்த்த பயிற்சி அளித்தனர்.
29-Jan-2025