மேலும் செய்திகள்
நகை திருடிய பெண் கைது
22-Feb-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சமையல் மாஸ்டரை செங்கல்லால் தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த சமையல் மாஸ்டர் பாலாஜி 39. இரு நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் டவுன் பஸ்ஸ்டாண்ட்டில் தலையில் காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ,போலீசார் சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் கொலையாளியை தேடி வந்தனர் . திருப்பூர் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த பின்னலாடை தொழிலாளி சுடலைமுத்துவை 26, கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் பாலாஜியை செங்கல்லால் அடித்து கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
22-Feb-2025