பாதி எரிந்த நிலையில் உடலை கைப்பற்றிய போலீஸ்
கொடைரோடு: கொடைரோடு அருகே தற்கொலை செய்தவரின் உடலை பாதி எரிந்த நிலையில் போலீசார் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஜே. ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் 35. மது அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கார்த்திக் மனைவி புனிதா குழந்தைகளுடன் சொந்த ஊரான போடிக்கு சென்று விட்டார். மன உளைச்சலில் இருந்த கார்த்திக் நேற்று முன் தினம் துாக்கிட்டு இறந்தார் . போலீசாருக்கு தெரியாமல் கார்த்திக் உடலை உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.அம்மையநாயக்கனுார் போலீசாருக்கு தாமதமாக தகவல் கிடைக்க மயானத்தில் பாதி எரிந்த நிலையில் இருந்த கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.