உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது

அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது

வேடசந்துார்: வேடசந்துாரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய கட்டட தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.வேடசந்துாரிலிருந்து பழநிக்கு நேற்று காலை 8:30 மணிக்கு அரசு பஸ் சென்றது. தாடிக்கொம்பு சில்வார்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் 40, பஸ் டிரைவராகவும், மாரம்பாடி மரியமங்களபுரத்தைச் சேர்ந்த செபஸ்தியார் கண்டக்டர் ஆகவும் பணியில் இருந்தனர். ஒட்டன்சத்திரம் ரோட்டில் பஸ் சென்றபோது முன்னால் இரு டூவீலர்களில் சென்றோர் வழி விடாமல் சென்றனர். அப்போது பஸ் டிரைவர் ஹாரன் அடித்து முந்தி சென்ற நிலையில் ஓரமாக செல்ல முடியாதா என கேட்டுள்ளார்.இதில் ஆத்திரம் கொண்ட டூவீலர்களில் சென்றோர் சேணன்கோட்டையில் பஸ் நின்ற போது பஸ் டிரைவரை கீழே இழுத்து தாக்கினர். டிரைவர் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ,பஸ்சில் வந்தோர் தகராறில் ஈடுபட்ட நபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதில் ஒருவர் தப்பினார். இதனிடையே மற்ற அரசு பஸ் டிரைவர் ,கண்டக்டர்கள் அங்கு வந்தநிலையில் எங்களுக்கு பாதுகாப்பில்லை, நியாயம் கிடைக்க வேண்டுமென கூறி பஸ்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வேடசந்துார் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் டூவீலர்களில் வந்து தாக்குதல் நடத்திய பூத்தாம்பட்டி சீனிவாசன் 39, சந்தோஷ் குமார் 19, ஆகியோரை கைது செய்தனர். தப்பிய காளனம்பட்டி நடராஜ் 40, ஐ தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை