உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஒட்டன்சத்திரம், ஜூலை 25- ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா முன்னிலை வகித்தனர். மருத்துவக்குழுவினர் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகராட்சி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, மேலாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் விஜயபால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ