யாரை குற்றம் சொல்வதோ; பெட்டிக்கடைகள் தோறும் புகையிலை விற்பனை ஜோர் n போலீஸ் கடமை நடவடிக்கையால் பாதிக்கும் சிறார்கள்
தடை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், பறிமுதல் செய்து அபராதம்விதிக்கவும், உணவுப் பாதுகாப்புத் துறை, போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்தாலும் கூலிப், கணேஷ், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து பகுதிகளிலும் கிடைக்கின்றன. சில்லரை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, வழக்கு போடுவது என கணக்கு காட்டும் அதிகாரிகள், இவற்றின் மொத்த விற்பனையாளர்களை கண்டுகொள்வதில்லை. இதனால் விற்பனை ஜோராக நடைபெறுகிறது. மேலும் பள்ளி, கல்லுாரி அருகே மாணவர்கள் ,சிறார்களை குறி வைத்து சர்வ சாதாரணமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதால் இவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற செயல்களை பெற்றோர் கண்டறிந்து கண்டித்தாலும் அவர்களுக்கு தெரியாமல் பழக்கத்தை தொடரும் போக்கும் தென்படுகிறது. பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோருக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.