கொடைக்கானலில் பயணிகள் உடமையை சூரையாடிய காட்டுமாடு
கொடைக்கானல், : கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் உடமைகளை சூறையாடிய காட்டுமாடால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் புகுந்ததால் பயணிகள் அச்சம் அடைந்து அங்கு, இங்கும் ஓடினர். நான்கு மாடுகள் ஒன்றாகச சென்று நிலையில் பின்னால் வந்த காட்டுமாடு ஒன்று பயணிகள் வைத்திருந்த வீட்டு உபயோக பொருட்களை சூறையாடியது. இதிலிருந்த மிளகாய் பொடி கொட்டியதால் காட்டுமாடு தலை தெறிக்க ஓடியது. இதுபோன்ற அசாதாரணமான சூழல் கொடைக்கானல் நகரில் நிகழ்வால் விபத்து அபாயம் உள்ளது. வனத்துறை இதில் அக்கறை காட்டி நகரில் சுற்றி திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதிக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.