தரிசு நிலத்தில் பிடித்த காட்டுத்தீ அணைப்பு
வேடசந்துார்: வேடசந்துார் வெள்ளனம்பட்டி அருகே, குட்டம் ராமசாமி என்பவருக்கு சொந்தமான 10 ஏக்கர் தரிசு நிலம் காட்டுப்பகுதியில் கம்பி வேலி போட்டு பாதுகாப்பாக உள்ளது. அங்கு நேற்று மாலை 5:30 மணிக்கு காட்டுத்தீ பற்றியது. தகவல் அறிந்த வேடசந்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் சென்றனர். தீயணைப்பு வாகனம் செல்ல வழி இல்லாததால் நடந்து சென்று, இலை தலைகளை ஒடித்து கொத்தாக வைத்து, அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். 2 மணி நேரம் போராடி இரவு 7:30 மணி வரை தீயைஅணைத்தனர்.