உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆம்னி வேன் கவிழ்ந்து பெண் பலி: ஐவர் காயம்

ஆம்னி வேன் கவிழ்ந்து பெண் பலி: ஐவர் காயம்

வேடசந்துார் : கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வந்த ஆம்னி வேன் கவிழ்ந்து பெண் பலியான நிலையில் ஐவர் காயமடைந்தனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி தெற்கு புதுப்பாளையம் ஏ.டி., காலனியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி பசுபதிகுமார் 27. இவர் தனது குடும்பத்துடன் மதுரை மீனாட்சியம்மன் கோயில் செல்ல ஆம்னி வேனை வாங்கி நேற்று அதிகாலை 2:30 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்டார். வேனை பசுபதிகுமார் ஒட்டினார். கரூர் திண்டுக்கல் ரோட்டில் ரங்கநாதபுரம் அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பசுபதிக்குமாரின் தாய் பர்வதம் இறந்தார். காயமடைந்த மகுடபதி, மரகதம், திவ்யா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். லேசாக காயமான பசுபதிக்குமார் அவரது மனைவி கீதா வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கூம்பூர் எஸ்.ஐ., திருமுருகன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ