செம்பட்டியில் 10 கடைகளுக்கு சீல்
செம்பட்டி: செம்பட்டி பஸ் ஸ்டாண்டில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.பச்சைமலையான்கோட்டை ஊராட்சியின் பராமரிப்பில் செம்பட்டி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. ஊராட்சியின் வருவாய் ஆதாரமாக இங்கு 30க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் நடத்தப்படும் சூழலில் வாடை கட்டாமல் பல லட்சம் ரூபாய் நிலுவை காரணமாக பலமுறை ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி வந்தது. இதையடுத்து மே 27ல் 10க்கு மேற்பட்ட கடைகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் விதிமீறி பிற கடைகளில் இருந்து இணைப்பு பெற்று வழக்கம்போல்வியாபாரம் தொடர்ந்தனர். இதை தொடர்ந்து நிலக்கோட்டை பி.டி.ஓ., பஞ்சவர்ணம், ஊராட்சி செயலர் ஜெய்கணேஷ் முன்னிலையில் 10 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இவற்றிற்கு விரைவில் ஏலம் நடத்தவும் எஞ்சிய கடைகளில் நிலுவை வாடகை வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.