100 நாள் திட்ட தணிக்கை
குஜிலியம்பாறை : ஆர்.கோம்பை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்த 2023---2024 ஆண்டுக்கான சமூக தணிக்கை நடந்தது. ஊராட்சி தலைவர் மலர்வண்ணன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் பெருமாள் வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கரோலின் மேரி, ஒன்றிய மேற்பார்வையாளர் ஜெயசீலன் பீட்டர், வட்டார வள அலுவலர் பால்ராஜ் பங்கேற்றனர். 100 நாள் திட்ட தொழிலாளர்களிடமும் பணிகள் குறித்து கலந்துரையாடல் நடந்தது.