மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலகம் முற்றுகை
15-Nov-2025
வேடசந்துார்: குட்டம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையான வேலை வாய்ப்பு கொடுக்காமல் , பணியில் ஈடுபடுவோரை தரக்குறைவாக பேசுவதாகவும், வயதானவர்களை சிரமப்படுத்துவதாகவும், ஒவ்வொரு தொழிலாளியிடம் வாரத்திற்கு தலா ரூ.150 வசூல் செய்வதாகவும் கூறி ஒன்று திரண்ட மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இவர்கள் கூறுகையில்,'' நீண்ட காலமாக இங்கேயே பணிபுரியும் ஊராட்சி செயலாளரை இடம் மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை . மாவட்ட நிர்வாகம் தலையிட்டு 100 நாள் வேலையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என்றனர்.
15-Nov-2025