செப்.6ல் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்
திண்டுக்கல், : 108 ஆம்புலன்ஸ் டிரைவர், மெடிக்கல் டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே சிலுவத்துார் மெயின்ரோட்டில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் செப் 6 காலை 9:00 மணிக்கு நடக்கிறது.மெடிக்கல் டெக்னீசியன் பணிக்கு பி.எஸ்.சி.,,நர்சிங் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்கவேண்டும். 19 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் கலந்துகொள்ளலாம். எழுத்துத்தேர்வு, அடிப்படை மருத்துவ அறிவு பரிசோதனை, நேர்காணல் முறையில் தேர்வு நடக்கும். தேர்ச்சி பெறுவோருக்கு 50 நாட்கள் பயிற்சியுடன் மாத ஊதியம் ரூ.21,320 வழங்கப்படும்.டிரைவர் பணியிடத்துக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பேட்ச் லைசென்ஸ், குறைந்தபட்சம் 162.5செ.மீ உயரம், 24 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, தொழில்நுட்பதேர்வு, டெஸ்ட் டிரைவ், நேர்காணல் முறையில் தேர்வு நடைபெறும். தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சியுடன் மாதம் ரூ.21, 120 ஊதியமாக வழங்கப்படும். நேர்முகத்தேர்வில் கலந்துகொள்பவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்துவரவேண்டும்.