மேலும் செய்திகள்
கோயில்களில் சிறப்பு தரிசனம்
09-Nov-2026
பழநி: பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் வருடாபிஷேக விழாவில் நேற்று சங்காபிஷேகம் நடந்தது. பழநி முருகன் கோயிலின் உபகோயிலான சன்னதி வீதியிலுள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் வருடாபி ஷேகம் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி கலசங்கள் வைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகவேள்வி நடந்தது. பின் சுவாமிக்கு புனிதநீரால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
09-Nov-2026