உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆட்டோவில் கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது

 ஆட்டோவில் கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்.சாலை எம்.எஸ்.பி., பள்ளி அருகே நகர் வடக்கு எஸ்.ஐ., சரத்குமார் தலைமையிலான போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்ததில் நிலக்கோட்டையை சேர்ந்த முத்துபாண்டி 43, குஜிலியம்பாறை கருப்புசாமி 29, பார்த்திபன் 25, தாடிக்கொம்பு நல்லதம்பி 21, நான்கு பேரும் மூடையில் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், 12 கிலோ கஞ்சா, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை