உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மண்ணெண்ணெய் குண்டு வீசிய 2 சிறுவர்கள் கைது

மண்ணெண்ணெய் குண்டு வீசிய 2 சிறுவர்கள் கைது

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தமிழர் தேசம் கட்சி நகர செயலாளர் செந்தில்குமார் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய கல்லுாரி மாணவர் உட்பட 17 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். வடமதுரை ஏழுமலையான் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழர் தேசம் கட்சி நகர செயலாளர் செந்தில்குமார் 55. இவரது மகன் ஹரிஸ் குமாருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் உருவானது. அக்.26 இரவு சிலர் செந்தில்குமார் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை தீவைத்து வீசினர். கதவில் மோதிய கண்ணாடி பாட்டில் கீழே விழுந்து உடைந்து தீப்பற்றி எரிந்தது. இவ்வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லுாரி மாணவர் உட்பட 2 சிறுவர்களை வடமதுரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி