உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 2026 தேர்தல் தி.மு.க.,வுக்கு பாதகமாக அமையும்: ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் எச்சரிக்கை

2026 தேர்தல் தி.மு.க.,வுக்கு பாதகமாக அமையும்: ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் எச்சரிக்கை

திண்டுக்கல், ஜூன் 22-''தேர்தல் வாக்குறுதி கொடுத்ததுபோல் பழைய ஓய்வூதியத்திட்டம் உட்பட ஆசிரிய சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 2026 சட்டசபை தேர்தல் தி.மு.க.,வுக்கு பாதகமாக அமையும் ''என தமிழக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் மாயவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆட்சி பொறுப்பேறுப்பதற்கு முன் பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு ஓடிவிட்டது. இனிவரும் காலங்களிலும் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவார்கள் என அறவே நம்பிக்கையில்லை.ஆசிரியர்களுக்கு அண்ணாதுரை, கருணாநிதி கொடுத்த உரிமையையும் பறித்துவிட்டனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றி தருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது அதை அமல்படுத்த முடியாது என நிதியமைச்சர் சட்ட சபையில் சொல்கிறார். 30 ஆயிரம் ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பவில்லை. தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு பணி வரன் இல்லை. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி ஆக.7ல் அகில இந்திய அளவில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்போம்.அதன்பின்னும் பரிசீலிக்கப்படாவிட்டால் மற்ற சங்கங்களை ஒருங்கிணைத்து சிறை நிரப்பும் போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவோம். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் 2026 சட்டசபை தேர்தல் தி.மு.க.,வுக்கு பாதாகமாக அமையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை