உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீச்சல் பழக சென்ற 3 சிறார்கள் மூழ்கி பலி

நீச்சல் பழக சென்ற 3 சிறார்கள் மூழ்கி பலி

சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கொசவப்பட்டி சந்தைரோட்டைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கோகுல், 13. இவர் கொசவப்பட்டி தனியார் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர். சூசையப்பர் தெருவைச் சேர்ந்த மணிமாறன் மகன் யாதேஷ், 10, நொச்சியோடைப்பட்டி தனியார் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர். புதுத்தெருவைச் சேர்ந்த ஞானசெல்வம் மகன் இன்பராஜ், 11, கொசவப்பட்டி தனியார் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர். நண்பர்களான இவர்கள் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் காலை 11 :00 மணிக்கு கல்குத்து ஓடை பேபி குளத்தில் நீச்சல் பழகச் சென்றனர்.ஆழமான பகுதிக்கு சென்ற மூவரும் நீரில் மூழ்கி இறந்தனர். அந்த குளத்திற்கு மதியம் 3:00 மணிக்கு மாடுகளை தண்ணீர் குடிக்க அழைத்துச் சென்ற சிலர், தண்ணீரில் சிறுவர்களின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை