மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனுக்குள் உலா வரும் மாடுகள்
22-Oct-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு செல்கின்றனர். ஐந்து பிளாட்பாரங்கள் உள்ள நிலையில் 3, 4வது பிளாட்பாரங்களில் வட, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அதிகம் செல்கின்றனர். மீதமுள்ள பிளாட்பாரங்களில் சற்று கூட்டம் குறைவாகவே இருக்கும்.நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சில நாட்களுக்கு முன்பே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.பயணிகள் வசதிக்காக ஸ்டேஷனில் சுகாதாரமான குடிநீர், துாய்மை பணி, கூடுதல் கவுன்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ரயில்வே அதிகாரிகள் செய்தனர்.அக்.,29, 30 ஆகிய நாட்களில் தீபாவளி விடுமுறையை கொண்டாட திண்டுக்கல் ஸ்டேஷனிலிருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வெளியூர் சென்றனர். பயணிகள் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
22-Oct-2024