உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சரக்கு ரயிலில் அணிவகுத்த 301 டிராக்டர்கள்

சரக்கு ரயிலில் அணிவகுத்த 301 டிராக்டர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில்லிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல சரக்கு ரயிலில் தயாராக இருந்த டிராக்டர்கள் பயணிகளை கவர்ந்தது. மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வாடிப்பட்டி அருகே தனியார் டிராக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தயார் செய்யப்படும் டிராக்டர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது. அந்தவகையில், தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 301 டிராக்டர்கள் அதற்குரிய பிரத்யேக சரக்கு ரயிலில் ஏற்றிப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த 301 டிராக்டர்களும் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ராஜஸ்தான், ஜெய்ப்பூர் மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. திண்டுக்கல் ரயில் நிலையில் புறப்படுவதற்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த இந்த டிராக்டர் சரக்கு ரயில், பயணிகள், சிறுவர், சிறுமிகளை கவர்ந்ததால் ரயில் நிலைய பயணிகள் அதன் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ