உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முதல்வர் திறனறிவு தேர்வில்  3260 மாணவர்கள் பங்கேற்பு

முதல்வர் திறனறிவு தேர்வில்  3260 மாணவர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் : அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் திறனறிவு தேர்வு நேற்று நடைபெற்றது.மாவட்டத்தை சேர்ந்த 3399 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 3260 மாணவர்கள் பங்கேற்றனர். 139 பேர் தேர்வு எழுதவில்லை. இதற்காக 13 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மேல்நிலை வகுப்புகள், 3 ஆண்டு பட்டப் படிப்புகள் வரை 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.10ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !