மேலும் செய்திகள்
நாமக்கல், மோகனுாரில் கொட்டித்தீர்த்த கனமழை
02-Sep-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 427 மி.மீ., மழை பதி வாகியது. மாவட்டத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. வெயிலால் பகல் நேரங்களில் பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திண்டுக்கல் உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 :00மணிக்கு மேல் மழை கொட்டியது. இரவு வரை மழை நீடிக்க திண்டுக்கல்லில் மட்டும் 80 மி.மீ., மழையளவு பதிவானது. இதனால் திண்டுக்கல் நகர் பகுதி தாழ்வான பகுதி வீடுகள், கடைகளில் மழைநீர் புகுந்தது. மெயின் ரோடு, ஆ.எஸ்., ரோடு, பழநி ரோடு, வத்தலகுண்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல் நீர் தேங்கியதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் பெய்த மழையில் 427.மி.மீ., பதிவாகி உள்ளது. இந்தாண்டில் பெய்த அதிகபட்சமான மழையளவு இதுவேயாகும்.
02-Sep-2025