உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.குஜிலியம்பாறை கரிக்காலியைச் சேர்ந்த தனியார் சிமென்ட் ஆலை ஒப்பந்த தொழிலாளி முருகேசன் 39. இவரது மனைவி பஞ்சவர்ணம் 41, தனியார் பள்ளி உதவியாளராக உள்ளார். இருவரும் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்த பஞ்சவர்ணம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. குஜிலியம்பாறை போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை