மேலும் செய்திகள்
தி.புதுப்பட்டியில் பால்குட விழா
26-Jul-2025
நத்தம்; திண்டுக்கல் மாவட்டம் குட்டுப்பட்டி கரந்தமலை கருப்பசுவாமி கோயிலில் 50 ஆடுகளை வெட்டி ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட ஆடி படையல் திருவிழா நடந்தது. குட்டுப்பட்டியில் இருந்து கரந்தமலை செல்லும் மலை அடிவாரத்தில் உள்ளது கரந்தமலைகருப்பசுவாமி கோயில். இக்கோயிலில் சுவாமி சிலைகள் இல்லாததால் வேல்களை அலங்கரித்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இங்கு இந்தாண்டுக்கான ஆடி படையல் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி மாலை வேல்களுக்கு பூக்களால் அலங்காரம் முடித்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடப் பட்டது. இதன்பின் 40 மூடைகள் அரிசியை கொண்டு 10க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சாதம் தயார் செய்து உருண்டைகளாக உருவாக்கப்பட்டது. நேற்று அதிகாலை கறி குழம்புடன் அசைவ அன்னதானம் நடந்தது. சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும் இந்த திருவிழா கொண்டாடப்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.
26-Jul-2025