வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பணம் பாதாளம் வரை பாயும்.
திண்டுக்கல்; தேனி மாவட்டம் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டியில் பட்டியலின கோயில் பூஜாரியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உட்பட 6 பேரை விடுதலை செய்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெரியகுளம் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் நாகமுத்து 22. கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பூஜாரியாக இருந்தார். கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக நாகமுத்துவுக்கும் ஓ. ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாகமுத்து தாக்கப்பட்டார்.2012 டிச.7ல் நாகமுத்து தற்கொலை செய்தார். இவரை தற்கொலைக்கு துாண்டியதாக கோயில் அறங்காவலராக இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உட்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி 2015 டிசம்பர் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை போது பாண்டி இறந்தார். மீதமுள்ள 6 பேர் மீதான வழக்கின் கடைசி கட்ட விசாரணை திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.நேற்று தீர்ப்பளிப்பதாக அறிவிக்கப்பட்டதால் ஓ.ராஜா, மணிமாறன், சிவகுமார், ஞானம், லோகு, சரவணன் ஆஜராகினர்.ஓ.ராஜா உட்பட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முரளிதரன் தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக வழக்கறிஞர் பவானிமோகன் தெரிவித்தார்.
பணம் பாதாளம் வரை பாயும்.