உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 63 டூவீலர்கள், 25 கார்களுடன் 30 சேவல்கள் பறிமுதல்

63 டூவீலர்கள், 25 கார்களுடன் 30 சேவல்கள் பறிமுதல்

ஒட்டன்சத்திரம், : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அனுமதி இன்றி நடந்த சேவல் சண்டையில் 30 சேவல்கள், 25 கார்கள், 63 டூ வீலர்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 20 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.ரெட்டியார்சத்திரம் சட்டையப்பனுார் கரட்டு பகுதியில் பந்தல் அமைத்து சேவல் சண்டை நடந்தது. எஸ்.பி., பிரதீப் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் சம்பவயிடத்தை சுற்றி வளைத்தனர். சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களிடமிருந்து 25 கார்கள், 63 டூவீலர்கள், 30 சேவல்களை பறிமுதல் செய்தனர்.இதில் ஈடுபட்ட கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், ஈரோடு, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பணமும் கைப்பற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ