8க்கு தொல்லை கொடுத்த 69 கைது
சாணார்பட்டி; திண்டுக்கல் ஆரியநல்லுாரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் 69. இவர் சைக்கிள் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். 4 ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். முதியவரின் தொல்லையால் சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் புகார்படி கோவிந்தராஜை சாணார்பட்டி மகளிர் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.