உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 7.5 ஒதுக்கீடு: நீட் மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கிய கலெக்டர்  

7.5 ஒதுக்கீடு: நீட் மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கிய கலெக்டர்  

திண்டுக்கல் : நீட் தேர்வில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் தேர்வான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் சரவணன் ஸ்டெதஸ்கோப் வழங்கி கவுரவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நீட் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வில் மாவட்டத்தை சேர்ந்த ஸ்வேதா, யாதேஷ், தனன்ஜெயன், செல்வ குமார், நிதீஷ் குமார் ஆகியோர் முதற்கட்டமாக தேர்வாகி உள்ளனர். இவர்களை கவுரவிக்கும் விதமாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாணவர்களை வரவழைத்து கலெக்டர் சரவணன் பொன்னாடை போர்த்தி பரிசாக ஸ்டெதஸ்கோப் வழங்கினார். மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் நீட் ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ethiraj
ஆக 07, 2025 09:17

They got medical seat only because of reservation it is not achievement. Why collector is be like politician. He has no other job to do


K V Ramadoss
ஆக 05, 2025 16:22

நீட் தேர்வின் அருமையும் அவசியமும் பற்றி திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு தெரிந்திருக்கிறது ..