8 கிலோ புகையிலை பறிமுதல்
நத்தம்: -நத்தம் சுற்று கிராம பகுதிகளில் தடை புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி,உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வசந்தன், ஜாபர் சாதிக் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டனர். நத்தம் பகவதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஜாஹீர் உசேன் சொந்தமான ரெடிமேட் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 8 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.