பத்திர பதிவு அலுவலகத்தில் ரூ.85,500 சிக்கியது
கள்ளிமந்தையம்:திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி .,நாகராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி, போலீசார் கள்ளிமந்தையம் பத்திரபதிவு அலுவலகத்தில் நேற்று இரவு சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத ரூ.85,500 ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சார் பதிவாளர் ஆனந்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.