13 வயது சிறுமி கர்ப்பம் தொழிலாளிக்கு ஆயுள்
திண்டுக்கல்,:விளாம்பட்டி கரித்தான்பட்டியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.விளாம்பட்டி மட்டப்பாறையை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி சுரேஷ் 47. இவர் 2022ல் கரித்தான்பட்டியை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பமானதை உறுதி செய்தனர்.விளாம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தில் சுரேஷை கைது செய்தனர். இதன்வழக்கு விசாரணை திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. சுரேசுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1.11 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.