ரோட்டில் கவிழ்ந்த காற்றாடி லாரி
சின்னாளபட்டி: சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு காற்றாலைக்கான காற்றாடி இறக்கையை 22 சக்கரங்கள் கொண்ட கன்டெய்னர் லாரி ஏற்றி வந்தது. திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலை வழியே வாகனத்திற்கு முன்பும், பின்பும் என ரோட்டின் வளைவு பகுதிகள், வாகன போக்குவரத்து, மேல்புற மரங்கள், கம்பிகள் குறித்த தகவல் தொடர்புக்கான பாதுகாப்பு வழிகாட்டி வாகனங்களும் வந்தன. சின்னாளபட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த ஊழியர்கள் குதித்து தப்பியதால் பாதிப்பும் ஏற்படவில்லை. ராட்சத காற்றாடிக்கு வழிகாட்டும் வாகனத்தில் இருந்த ஊழியர்களின் குழப்பும் வகையிலான தகவல் தொடர்பு காரணமாக வாகனம் கவிழ்ந்திருக்கலாம் என இப்பகுதியினர் தெரிவித்தனர்.