ரோட்டில் முறிந்து விழுந்த மரம்
கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனுார் ரோட்டில் மரம் முறிந்து விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் ஏராளமான மரங்கள் உள்ளன. நேற்று கூக்கால் பிரிவு அருகில் உள்ள மரம் ரோட்டில் விழுந்தது. நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாத நிலையில் வாகன ஓட்டிகளே மரத்தை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர் செய்தனர்.