உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு உதவிக்கு ஏங்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்பம்; வயதான தந்தையின் வருவாயால் வாழும் பரிதாபம்

அரசு உதவிக்கு ஏங்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்பம்; வயதான தந்தையின் வருவாயால் வாழும் பரிதாபம்

கொடைக்கானல்; கொடைக்கானலில் மாற்றுத்திறனாளிகள் மூவர் உள்ள குடும்பம் வறுமையால் பாதித்துள்ள நிலையில் அரசு உதவிக்கு ஏங்கி உள்ளனர். கொடைக்கானல் கிளாவரையை சேர்ந்தவர்கள் முருகன், தனம்மாள் தம்பதியினர் .இவர்களுக்கு ரமேஷ் 27, சுரேஷ் 26, ஷோபனா 21, மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் மூவரும் பிறவியில் நன்கு இருந்த நிலையில் 10 வயதை கடந்த பின் நடக்க முடியாமல்போனர். சிகிச்சைக்கு போதிய வசதியில்லாத நிலையில் வயதான தம்பதியின் வருமானம் மூலம் குடும்பம் நடத்துகின்றனர். தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றொருவர் துணையுடன் இயற்கை உபாதை உள்ளிட்ட தங்களது அன்றாட வாழ்வை நகர்த்துகின்றனர். இவர்களை தாய் தனம்மாள் கவனிக்கும் நிலையில் முருகன் 70, வருவாயை நம்பி உள்ளது. சில மாதத்திற்கு முன் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டு உதவித் தொகைக்கு விண்ணப்பித்த நிலையில் இதுவரை இவர்களுக்கு உதவித் தொகை கிடைக்காத பரிதாப நிலை உள்ளது. சுரேஷ் கூறுகையில்,''10 வயது வரை நடந்த தாங்கள் மூவரும் போலியோ பாதிப்பால் மாற்றுத்திறனாளியானோம். மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்ற போதும் தங்களுக்கு அரசு உதவி கிடைக்கவில்லை. எங்களது சேதமடைந்த வீட்டை கட்டித் தர வேண்டும். நாங்கள் மூவரும் நடமாட மாற்றுத் திறனாளி செல்லும் வாகனம் தேவை, கழிப்பறை வசதி, ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளி உதவித் தொகை வழங்கி தங்களது வாழ்வை மேம்படுத்த அரசு உதவி புரிய வேண்டும்''என்றார். வயதான தந்தையின் வருமானத்தில் வாழும் மாற்றுத் திறனாளிகள் வாழ்வு சிறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி