உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்கள் இல்லாத அரசு பள்ளி

மாணவர்கள் இல்லாத அரசு பள்ளி

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எஸ்.குரும்பபட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் மாணவர்களே இல்லை.சிங்காரக்கோட்டை ஊராட்சி எஸ்.குரும்பபட்டியில் செயல்பட்டு வந்த அரசு கள்ளர் துவக்கப் பள்ளி போதிய மாணவர்கள் இல்லாமல் 2012ல் மூடப்பட்டது. கிராமத்தினர் முயற்சியால் 2021ல் 10 மாணவர்களுடன் மீண்டும் பள்ளி செயல்பட துவங்கியது. ரூ.5 லட்சம் செலவில் புதிய கட்டடமும் கட்டப்பட்டது.ஆனால் தற்போது மாணவர்கள் யாரும் இல்லை. ஆசிரியர் பிரகாஷ் மட்டும் தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறார். மாணவர்களை சேர்க்க கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ