கொடை ரோட்டில் சரிந்த மரம்
கொடைக்கானல்: கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோட்டில் மரம் விழுந்ததில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூலத்துார் பிரிவு அருகே ராட்சத மரம் விழுந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மரத்தை அகற்ற போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மலை ரோட்டில் ஏராளமான காய்ந்த மரங்கள் விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சில தினங்களுக்கு முன் மூலையாறு பகுதியில் சுற்றுலா வாகனம் மீது மரம் விழுந்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். அதனருகே இன்னும் ஏராளமான மரங்கள் காய்ந்த நிலையில் விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை காய்ந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.