உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் நாய் போல் குரைத்து கடிக்க பாய்ந்த வாலிபர்

ரயிலில் நாய் போல் குரைத்து கடிக்க பாய்ந்த வாலிபர்

திண்டுக்கல்; சென்னை சென்ற ரெயிலில் நாய்போல் குரைத்தப்படி பயணிகளை கடிக்க பாய்ந்த வடமாநில வாலிபர், போதைக்கு அடிமையானதால் இவ்வாறு நடந்துகொண்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து சென்னைக்கு தினசரி ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது திண்டுக்கல்லுக்கு நேற்று முன் தினம் இரவு வந்தது. அப்போது வடமாநில இளைஞர் ஒருவர் நாய் போல் குரைத்து பயணிகளை கடிக்க முயற்சித்துள்ளார். அச்சமடைந்த பயணிகள் ெரயில்வே போலீஸ், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அந்த பயணிகளால் முகம், கை, கால்களை கட்டிய நிலையில் 108 ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். டாக்டர்கள் , செவிலியர்களின் பெரும் போராட்டத்துக்கு பின் சிகிச்சை அளித்தனர். போலீஸ் விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரிந்தது. மருத்துவ சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதால் அப்படி நடந்துகொண்டதும், நாய் உள்ளிட்ட விலங்குகள் கடித்ததற்கான எந்த அடையாளமும் அவரின் உடலில் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை