மேலும் செய்திகள்
கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது
09-Aug-2025
திண்டுக்கல்; ஆர்.எம். காலனி ஜங்ஷன் அருகே நடந்துசென்ற பெண்ணிடம் ஏழரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வழக்கில் மதுரை மாவட்டம் அனையூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூவலிங்கம் 36, கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்தது. 2021 முதல் வழக்கு விசாரணையில் ஆஜரா காமல் பூவலிங்கம் தலைமறைவானார். அவருக்கு பிடிவாரான்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பூவலிங்கத்தை திண்டுக்கல் மேற்கு எஸ்.ஐ.,காதர் தலைமையிலான போலீஸ் சிவகங்கை மாவட்டம் உத்தமனுாரில் நேற்று கைது செய்தனர்.
09-Aug-2025