விபத்து அபாயம் மின்கம்பம் சீரமைப்பு
வடமதுரை: அய்யலுார் எத்தலப்பநாயக்கனுார் அருகிலுள்ள முராரி சமுத்திரம் குளம் வழியே மின் கம்பங்கள் நடப்பட்டு விவசாயம், வீடுகளுக்கு மின்சப்ளை செய்யப்படுகிறது. குளத்தின் நடுவே நடப்பட்டிருந்த மின்கம்பம் சாய்ந்த நிலைக்கு மாறியது. பக்கத்து மின்கம்பங்களின் ஆதரவில் மின் ஒயர்களின் தாங்கு திறனால் கீழே விழாமல் விபத்து ஆபத்தாக காத்திருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் இன் பாக்ஸ்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரியத்தினர் மின்கம்பத்தை சாய்வு நிலையில் இருந்து நேராக நிமிர்த்தியதுடன் அடிப்பாகத்தில் கல், மண் கொண்டு ஸ்திரமாக்கினர். இதனால் அப்பகுதியில் நீண்ட நாட்களாக இருந்த விபத்து ஆபத்து நீங்கியது.