வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எப்ப TASMAC மூடி குடிச்சவங்களுக்கு வரும் பிரச்சனைகளை குறைக்கிறாங்களோ, அப்பத்தான் இதையும் மூடுவாங்க. "செத்த பின் லட்சங்களை கொடுக்கும்" "விழுந்த பின் அரசு காவலர்களின் கஷ்டப்படும் வேலைகளும்"
மாவட்டம் முழுவதும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குளத்து பாசனம் மூலம் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். மற்றவர்கள் அனைவருமே ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி அதிலிருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏராளமான தோட்டங்களில் ஆழ்துளை கிணறுகளின் பயன்பாடுகள் அதிக அளவில் உள்ளது. சில ஆண்டுகளில் ஆழ்துளை கிணறுகளின் பயன்பாடுகள் முடிந்ததும் விவசாயிகள் திறந்த நிலையில் அப்படியே இவைகளை விட்டுச் செல்கின்றனர். இதனால் அவ்வழியில் செல்லக்கூடிய கால்நடைகள் அதில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. சில நேரங்களில் குழந்தைகளும் தவறி விழும் சம்பவங்களும் நடக்கிறது. பெரும் விபத்து ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2025ல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விவசாய நிலங்களில் பயன்பாடு இன்றி கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
எப்ப TASMAC மூடி குடிச்சவங்களுக்கு வரும் பிரச்சனைகளை குறைக்கிறாங்களோ, அப்பத்தான் இதையும் மூடுவாங்க. "செத்த பின் லட்சங்களை கொடுக்கும்" "விழுந்த பின் அரசு காவலர்களின் கஷ்டப்படும் வேலைகளும்"