மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
11-Apr-2025
ஒட்டன்சத்திரம் : நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் ,நவாமரத்துப்பட்டிபுதுார் பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேகம் ,தீபாராதனை நடந்தது. காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயிலில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒட்டன்சத்திரம் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் நடந்தது.
11-Apr-2025