/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதனையாளர்களுக்கு வயது வறுமை தடை இல்லை காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் பேச்சு
சாதனையாளர்களுக்கு வயது வறுமை தடை இல்லை காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் பேச்சு
சின்னாளபட்டி: ''சாதனையாளர்களுக்கு வயதோ, வறுமையோ தடை இல்லை'' என காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் பேசினார்.காந்திகிராம பல்கலையில் நடந்த தமிழ் துறை சார்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அறக்கட்டளை சொற்பொழிவில் தலைமை வகித்த அவர் பேசியதாவது: படைப்பாளர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் வயதோ, வறுமையோ எப்போதும் தடையாக இருந்ததில்லை. உலகின் சாதனையாளர்கள் பலர் மிக இளம் வயதிலேயே சாதனைகளை அரங்கேற்றி உள்ளனர். மிக சிறந்த படைப்பாளிகள் தங்கள் திறனை மிக குறைந்த வயதிலேயே வெளிப்படுத்தி உள்ளனர் என்றார்.அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். திரைப்பட இயக்குனர் பிருந்தா சாரதி ,இந்திய மொழிகள் புல முதன்மையர் முத்தையா, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசினர். உதவி பேராசிரியர் சிதம்பரம் நன்றி கூறினார்.