விவசாய மின் வயர் திருட்டு
வேடசந்துார் : எஸ்.புதுார் பகுதியில் உள்ள 7 விவசாய கிணறுகளில் நள்ளிரவில் புகுந்த நபர்கள் மின் கம்பத்தில் ஏறி மின் மோட்டார் செல்லும் வயர்களை வெட்டி எடுத்து சென்றனர். இதனால் கால்நடைகளுக்கு கூட குடிநீர் இன்றி மோட்டாரை இயக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் வயர்கள் திருடு போனதாக விவசாயிகள் ரங்கராஜ், பாலசுப்பிரமணி, கணேசன் சாமிவேல் உட்பட 7 பேர் வேடசந்துார் போலீசில் புகார் செய்துள்ளனர்.