வேளாண் அலுவலர்கள் கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில், தமிழக உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம் தனியார் கூட்டரங்கில் நடந்தது. மாநிலத்தலைவர் அருள் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ராஜாங்கம் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் மணிவண்ணன், பொருளாளர் ஆதிநாராயணன், அமைப்பு செயலாளர் மணி, இணை செயலாளர் பழனிக்குமார் பேசினர். தீர்மானங்களை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் வாசித்தார். பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.