மேலும் செய்திகள்
நத்தத்தில் ஜெ.,நினைவு நாள்
08-Dec-2024
நத்தம்: நத்தம்,திண்டுக்கல்லில் அண்ணா பல்கலை.,மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமையை கண்டித்தும்,இதை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.,அரசை கண்டித்தும் அ.தி.மு.க.,சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன்,சீனிவாசன் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.-நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமை ச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: அண்ணா பல்கலை.,யில் மாணவி பாலியல் தொந்தரவு செய்யபட்டதை அ.தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் இந்த சம்பவத்தில் சார் ஒருவர் சம்பந்தபட்டு இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார். அந்த சார் யார் என்பதை தமிழக அரசும், முதல்வரும் தெளிவு படுத்த வேண்டும். இதில் தி.மு.க.,வின் முக்கிய பிரமுகருக்கு சம்பந்தம் இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. இது மட்டுமல்ல தமிழகம் போதை மாநிலமாக மாறுகிறது. இந்த ஆட்சி வந்த முதலே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. தமிழகம் முழுவதும் மது கலாச்சாராமாக மாறி பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய தமிழக அரசை அகற்ற உறுதியேற்போம் என்றார்.ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், எம்.எல்.ஏ., தேன்மொழி சேகர்,முன்னாள் எம்.எல்.ஏக்கள் வேணுகோபாலு, குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத் தலைவர் சேக்ஒலி வரவேற்றார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சின்னு, மணிகண்டன், சுப்பிரமணி, ஊராட்சி தலைவர்கள் கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ்,பொதுக்குழு உறுப்பினர் சுகன், ஆத்துார் ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, சின்னச்சாமி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஆரோக்கியசாமி,மாநில பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணை செயலாளர்கள் இளம்வழுதி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் கிரசர் பாலு, மாவட்ட இணைச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் ஹரிகரன், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர்கள் ஆண்டிச்சாமி, சின்னச்சாமி, சாணார்பட்டி ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், குணசேகரன், ஒன்றிய பொருளாளர் ரமேஷ்பாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜி.டி.அந்தோணி பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே அ.தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசுக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட 150 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அமைப்புச் செயலர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி, பிரேம்குமார், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் பங்கேற்றனர்.
08-Dec-2024