அ.தி.மு.க., ஒன்றிணைய காவடி எடுத்த தொண்டர்
பழநி:அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டி தொண்டர் பழநி முருகன் கோயிலுக்கு பறவை காவடி எடுத்து வந்தார்.பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த அ.தி.மு.க., தொண்டர் கிருஷ்ணன். கட்சி ஒன்றிணைய வேண்டி பறவை காவடி எடுத்து வந்தார். அலகு குத்தி பறவை காவடியுடன் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தார். இவர் சசிகலாவின் விசுவாசி ஆவார்.