உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பொது இடங்களில் மது அருந்தும் சம்பவங்களை தடுக்கலாமே: போலீசார் கண்காணிப்பு கட்டாயம் அவசியம்

பொது இடங்களில் மது அருந்தும் சம்பவங்களை தடுக்கலாமே: போலீசார் கண்காணிப்பு கட்டாயம் அவசியம்

மாவட்டம் முழுவதும் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களும் போதை வஸ்துகளை பெற்றோர்கள்,ஆசிரியர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மதுபிரியர்கள் மது குடிப்பற்காக டாஸ்மாக் பார்களுக்கு செல்கின்றனர். அங்கு அமர்ந்து மது குடித்து விட்டு தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். ஒருசிலர் மது பாட்டில்களை வாங்கி கொண்டு பஸ் ஸ்டாண்ட்,ரோட்டோரங்கள்,பொது இடங்களில் நின்று கொண்டு மதுகுடிக்கின்றனர். சிலர் துணிகள் விலகியபடி போதையில் ரோட்டோரங்களில் சுய நினைவு இல்லாமல் மயங்கி கிடக்கின்றனர். இதனால் அவ்வழியில் செல்லும் பெண்கள்,வயதானவர்கள் அச்சமடைகின்றனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட தான் செய்கின்றனர். இருந்தபோதிலும் மது பிரியர்கள் அதை நினைத்து கவலையடையாமல் அதேநிலையை கடை பிடிக்கின்றனர். பொது மக்கள் யாராவது இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரிடம் ஏன் பொது இடங்களில் மது குடிக்கிறீர்கள் எனக்கேட்டால் போதும் அவ்வளவு தான் உடனே போதை ஆசாமிகள் கேட்போரிடம் சண்டையிட்டு தாக்குகின்றனர். இதனால் பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. பொது இடங்களில் மது குடிக்கும் சம்பவங்கள் தற்போது எங்கு பார்த்தாலும் அதிகரித்த வண்ணமாக உள்ளது. தொடரும் இப்பிரச்னை மீது போலீசார் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kanns
நவ 11, 2024 08:39

Police already have Mandate of Controlling All AntiSocial/ Anti-Society Crimes BUT they Fail to Control those Goonďas/Groups/Gangs But only Harass Good People, all for Vested -Selfish Interests. Better Abolish Superiors, as they Failed to Control the Rot for Share of Loot


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை