உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 2000 எழுத்துக்களை பயன்படுத்தி டி.வி.ஆர்., ஓவியம் பழநி சுவாமி பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் அசத்தல்

2000 எழுத்துக்களை பயன்படுத்தி டி.வி.ஆர்., ஓவியம் பழநி சுவாமி பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் அசத்தல்

பழநி : தினமலர் 75ம் ஆண்டு பவள விழாவை தொடர்ந்து தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் உருவப்படத்தை பழநி சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் ஆவித் 2000 எழுத்துக்களை பயன்படுத்தி வரைந்துள்ளார். பழநி சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர் ஆவித் 13. உங்கள் உலக அறிவை விரிவாக்க நீங்கள் செல்ல விரும்பும் இடம் என்ற தலைப்பில் பட்டம் மாணவர் இதழில் இவரது கருத்து புகைப்படத்துடன் வெளிவந்தது. சிறுவர் மலரில் இவர் வரைந்து அனுப்பிய ஓவியம் வெளிவந்துள்ளது. மேலும் பட்டம் மாணவர் பதிப்பு மூலம் தினமலர் நாளிதழில் நடத்திய வினாடி, வினா போட்டியில் சான்றிதழ், மெடல் பெற்றுள்ளார். தற்போது தினமலர் நாளிதழ் 75ம் ஆண்டு பவளவிழா நடைபெற்று வரும் நிலையில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் உருவப்படத்தை 2000 எழுத்துக்களை பயன்படுத்தி வரைந்துள்ளார். இந்த ஓவியம் 1.5 அடி உயரம், 2 அடி அகலத்துடன் உள்ளது. ஆவித் கூறியதாவது: டி.வி.ராமசுப்பையர் கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைத்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு கடல்தாமரை என்ற நுாலில் உள்ளது. இதை நான் படித்துள்ளேன். தினமலர் சிறுவர் மலரில் ஓவியங்கள் வரைந்து அனுப்பி ரூ.500 பரிசு பெற்றுள்ளேன். பள்ளியில் நடத்திய தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு வினாடி வினாவில் வென்று மதுரை சென்று பரிசு பெற்றுள்ளேன். தினமலர் நாளிதழ் பவள விழா கொண்டாட்டத்தை யொட்டியும், தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாளை யொட்டியும் அவரது படத்தை வரைந்து உள்ளேன். இதற்கு 2000 எழுத்துக்களை பயன்படுத்தி உள்ளேன். இதற்காக தினமும் 3 மணி நேரம் என நான்கு நாட்களாக 12 மணி நேரம் ஒதுக்கினேன். பள்ளி தாளாளர் ரத்தினம், சேர்மன் சின்னச்சாமி, செயலாளர் அபிஷேக், முதல்வர் கவிதா, ஓவியஆசிரியர் அன்புச்செல்வன் உறுதுணையாக இருந்தனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி