பள்ளத்தில் கவிழ்ந்த உளுந்து லாரி
வேடசந்துார்:கரூர் -- திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் உளுந்து மூடைகளை ஏற்றி சென்ற லாரி ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.சேலம் மேட்டூரை சேர்ந்தவர் டிரைவர் மைனர்ராஜன் 58. இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து25 டன் எடை கொண்ட 431 உளுந்து மூடைகளை ஏற்றிக் கொண்டு மதுரையை நோக்கி சென்றார்.நேற்று அதிகாலை வேடசந்துார் விட்டல்நாயக்கன்பட்டி அருகே டிரைவர் கண் அயர்ந்துள்ளார். இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.உளுந்து மூடைகள் ரோட்டில் சிதறின. டிரைவர் காயமின்றி தப்பினார். மாற்று லாரி வரவழைக்கப்பட்டு உளுந்து மூடைகள் ஏற்றி மதுரைக்கு அனுப்பப்பட்டது. கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் எடுத்துச் சென்றனர்.